இஸ்லாமி பைத்துல்மால், கீழக்கரை
சமூக சேவையில் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு முதல்

ISLAMI BAITHUL MAL, KILAKARAI

நமது கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நமது ஊரின் பெரியோர்களால் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற ஊரில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் சிரமங்களையும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பெருந்தன்மை நோக்கத்துடன் துவங்கப்பட்டது.

The Islami Baithul-Mal Kilakarai was established in August 1986 by senior members of town with a noble intention of addressing the undisclosable financial difficulties and needs of deprived poor and downtrodden people of kilakarai and surrounding places.

ஒன்பது நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தலைவர், ஒரு செயல் உதவித்தலைவர், இரண்டு உதவித்தலைவர்கள், செயலாளர், மூன்று உதவிச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் இருபது செயற்குழு உறுப்பினர்கள் தலைவர் ஹாஜி M.M.H.சாதிக் அலி அவர்கள் தலைமையின் கீழ் அடங்குவர்.

There are 9 Managing Committee members which includes President, one Executive Vice-President, 2 Vice-presidents, Secretary, 3 Assistant Secretaries, Treasurer and 20 Executive Committee members under the presidentship of Al-Haji M.M.H.Sadique Ali.

இந்த நிறுவனம் தமிழ் நாடு சங்கப்பதிவு விதிமுறை 1975ன் கீழ் தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் வசதியற்ற மிகவும் சிரமத்திற்குள்ளான ஜாதி மத வேறுபாடின்றி நமது ஊரைச்சார்ந்த அத்துடன் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு ஸகாத், ஸதக்கா மற்றும் நன்கொடை நிதிகள் மூலம் பல உதவித் திட்டங்களை ஜமாஅத்கள் ஒத்துழைப்புடன், தகுதியானவர்களை கண்டறிந்து உதவிகள் செய்து வருகிறோம். அத்துடன் நமது ஊரைச் சார்ந்த நபர்களுக்கு வரையரைக்கு உட்படுத்தப்பட்ட நிரந்திர நிதி (Corpus Fund ) மற்றும் என்டோமென்ட் நிதியைக் கொண்டு வட்டியில்லா கடனும் வழங்கி வருகிறோம்.

This organization is registered under T.N Societies Registration Act. 1975. Right from inception, this organization is doing yeoman Service to poor and downtrodden people of Kilakarai and surrounding places irrespective of all communities with various welfare schemes by collecting Zakath, Sadaqa and donation from our native people and utilize the same to deserving rightful recipients. In addition we have Interest Free loan scheme to serve local people by using corpus  and endowment fund.