1. ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதாந்திர உதவி 2. ஏழை மாணவர்களின் உயர் கல்வி உதவி 3. ஏழை குமர்களுக்கு திருமண உதவி மற்றும் ஸ்பான்சர்கள் உதவியுடன் கருசமணி வழங்குதல் 4. ஏழைகளுக்கு மருத்துவ உதவி 5. ஏழைகளின் பழுதைடைந்த வீடுகளை மராமத்து செய்தல் 6. ஏழை சிறுவர்களின் சுன்னத் (கத்னா) உதவி 7. வழிப்போக்கர் உதவி 8. சிரமத்தில் உள்ள மெய் நெறி மீட்டோர்களுக்கு உதவி 9. ஏழை பொது உதவி மற்றும் தகுதி அடிப்படையில் தையல் மெஷின் வழங்குதல் 10. ஏழை ஜனாஸா நல்லடக்க உதவி 11. எதிர்பாரத விதமாக ஏற்படும் பேரிடருக்கான உதவி 12. வட்டியில்லா கடன் வழங்குதல் (உள்ளூர் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களுக்கு ) 13. மார்க்க ஒழுக்க போதனைக்கு உழைத்தல், உதவுதல்
Our Welfare activities
Monthly doles to poor and needy.
Higher education assistance on merit cum means basis.
Medical assistance.
Marriage assistance and give Karusamani if Sponsors donate.
House repair assistance.
Khathna /Sunnath assistance to poor.
General aid to poor which includes free sewing machine for eligible beneficiaries.
Help to overcome the difficulties faced by revert faithful.
Wayfarer assistance.
Untoward disaster relief assistance.
Burial Service to poor.
Interest-free loan to local people.
Strive to impart Islamic morals and knowledge for the community to follow the right path.
நிரந்தர பலன் அளிக்கும் நிதி
நற்செயல் மனப்பான்மை கொண்ட நன்மக்கள் இந்த நிதியை அவர்கள் பெயரில் அல்லது மறைந்த பெற்றோர்கள், உறவினர்கள் பெயரில் அவர்கள் விருப்பப்படி அந்த நிதியை முழுமையாகவோ அல்லது முறையாக பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்து அதிலிருந்து பெறப்படும்.
பங்கு ஆதயத்தை( Dividend )கொண்டு வட்டியில்லா கடன் திட்டத்திற்கான உதவியளித்து வருகிறோம் இந்த உதவி ஸதக்கத்துன் ஜாரியா போன்ற நிரந்தர மனிதாபிமான உதவியாகும்.
Endowment Scheme
Benevolent minded individuals donate either in their name or in memory of their late parents or kith and kins. This amount is invested in Mutual Fund especially UTI in rightful portfolios.
Depending on the option of donors either the whole amount or dividend from investment are utilized for Interest free loan scheme.
This Philanthropy is considered as “Sathakathun Jaria” or Continuous humanitarian help.
நேசக்கரம்
“நேசக்கரம்” திட்டத்தின் கீழ் சிறுநீரக செயலின்மை, கேன்ஸர், மன நோய் உடையவர், ஆற்றல் குறைபாடுகள் உள்ள வசதியற்ற இறுதிக்கட்ட நிலையில் (Terminally Nil ) சிரமப்படும் பயனாளிகள் முதலானோர் சிலரைக் கண்டறிந்து அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் அளித்து, அவர்கள் நலம் பெற துஆ செய்து, அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ2000 கொடுத்து உதவுகிறோம். மேலும் சில ஸ்பான்சர்கள் முன் வரும் பட்சத்தில் இது போன்ற உதவிகளை விரிவு படுத்தலாம்.
ஸ்பான்சர்களுடன் ஒருங்கினைந்து இலவச மருத்துவ முகாம் நடத்துதல்.
ஸ்பான்சர்கள் ஒருங்கினைப்புடன் ஹஜ் பெருநாள் சமயம் கூட்டுக்குர்பானி ஏற்பாடு செய்து, அதில் பெறப்படும் இறைச்சிகளை நமது ஊர் 8 ஜமாஅத்துகளைச்சார்ந்த தகுதியான பயனாளிகளுக்கு வழங்குதல்.
ஸ்பான்சர்கள் உதவியுடன் மாதாந்திர உதவி மற்றும் நேசக்கரம் உதவி பெறுபவர்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்புக்குத் தேவையான உணவுப் பொருள் முடிச்சிப்பைகளை வழங்குதல்.
எவ்வித ஆதரவுமற்ற கடைக் கோடி ஏழைகளின் அவசர கால சிகிச்சைக்கு (Emergency Medical Assistance) சற்று கூடுதலாக நிதி அளித்து உதவுதல்.
உயர் கல்வி பயில உள்ள மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்குதல்.
ஸ்பான்சர் உதவியால் மாணக்கர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நமது ஊரைச்சார்ந்த ஆங்கில மற்றும் தமிழ் வழி +2 மாணக்கர்களுக்கு முதல் மூன்று படித்தரத்தில் முன்னிலை பெற்றவர்களுக்கு சான்றிதழ் விருதுக் கேடயம் (Shield) வழங்குதல்.
NESAKARAM
“NESAKARAM” (Helping Hand) programme in which terminally ill persons such as disabled, invalid, cancer, kidney ailment, mentally retarded etc. are seen personally in their location, consoling them and reciting Dua for their well-being and speedy recovery. Each one is paid Rs:2000 per month. We can support more such people provided sponsors come forward for this genuine cause.
Coordination with Sponsors arranging free medical camps.
Coordination and arranging with Sponsors during Eid-ul adha Qurbani rites and distributing sacrificial meat to rightful beneficiaries to all the 8-Jamaths of Kilakarai.
Under sponsorship, distribution of household essentials kits during Ramalan to monthly doles and “NESAKARAM” help receiving beneficiaries.
Emergency medical aid for life threatening disorder by giving reasonable amount to persons extremely poor with no source of income at all.
Counselling and Career guidance to Students are imparted as and when required.
Under sponsorship, +2 Students of Matriculation, CBSE and Tamil medium Schools of Kilakarai are honoured by awarding certificate, Shield for 1st,2nd and 3rd ranks.